Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழகத்தையே மொத்தமாக வளைத்துபோட்ட விஸ்வாசம்! அப்போ பேட்ட நிலைமை என்ன?

தமிழ் ரசிகர்களுக்கு அடுத்த வருடம் தொடக்கத்திலேயே பொங்கல் பரிசு காத்திருக்கிறது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட, தல அஜித்தின் விஸ்வாசம் என செம்ம விருந்து காத்திருக்கிறது.

இதில் எந்த படம் பொங்கலில் அதிகம் வசூல் செய்யப்போகிறது என்ற சந்தேகம் அனைவரிடத்திலும் இருக்கிறது.

இந்நிலையில் விஸ்வாசம் படத்தயாரிப்பு நிறுவனம் தமிழகத்தில் சென்னை சிட்டி, செங்கல்பட்டு தவிர மற்ற இடங்களில் ஏறக்குறைய 70 சதவீதம் திரையரங்கத்தை கைப்பற்றி விட்டார்களாம்.

அதாவது ஜனவரி 5ம் தேதி முதலே அந்த திரையரங்குகளை வாடகைக்கு எடுத்து விட்டார்களாம். முன்னரே பொங்கல் ரிலீஸ் என அறிவித்துவிட்டதால் இதை முன்னெச்சரிக்கையாக செய்துவிட்டார்களாம்.

இதனால் தல ரசிகர்களுக்கு நல்ல விருந்து காத்திருக்கிறது. ஆனால் பேட்ட படத்துக்கு அப்போ எந்தளவு திரையரங்குகள் மற்ற இடங்களில் கிடைக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.