Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

23 வருடங்களுக்கு பிறகு ரஜினி செய்த பிரம்மிப்பான செயல்! அடேயப்பா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரின் படங்கள் உலக நாடுகள் பலவற்றில் அவரின் படம் வெளியாகிறது.

அடுத்ததாக நாளை வரவுள்ள 2.0 படத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள் உலகத்தமிழர்கள். ரஜினி ஆரம்பகாலத்தில் வருடத்திற்கு அதிகமான படங்களில் நடிப்பாராம். அதில் உச்சக்கட்டமாக சில வருடங்களில் 7 - 8 படங்கள் கூட வெளியாகியிருக்கிறது.

கடந்த 1995 ல் வந்த பாட்ஷா படத்திற்கு பிறகு அவரின் படங்களுக்கிடையே பெரும் இடைவெளி காணப்பட்டது. பின் 2014 ல் கோச்சடையான், லிங்கா என படங்கள் தொடர்ந்துவந்தது.

இந்த வருடம் ஒரு சிறப்பும் உள்ளது. என்ன தெரியுமா? 12 மாதங்களில் அவர் நடிப்பில் ஏற்கனவே ஜூன் மாதத்தில் வெளியான காலா படத்தை தொடர்ந்து இந்த நவம்பரில் 2.0 படமும், வரும் ஜனவரியில் பேட்ட படமும் ரிலீஸாகவுள்ளதாம்.