Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்காரை முந்தி 2.0 பிரம்மாண்ட சாதனை! ஒரே தியேட்டரில் இத்தனை ஆயிரம் டிக்கெட் விற்றதா..

இன்னும் சில மணி நேரத்தில் 2.0 காட்சிகள் உலகம் முழுவதும் துவங்கவுள்ளது. அதனால் ரசிகர்கள் மிக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் சென்னையில் பிரபல திரையரங்கமான ரோகினி தியேட்டரில் ரிலீஸுக்கு முன்பே 22 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுள்ளது. அது சர்காரை விட அதிகம், இந்த வருடத்தில் 2.0 தான் முதலிடம் என தியேட்டர் தரப்பில் கூறியுள்ளனர்.

ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 2.0 படம் முதல் வாரத்தில் 500 கோடிக்கும் மேல் வசூலிக்கும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.