Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2.0 தமிழ் படம் கிடையாது: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த பிரபலம்

2.0 உலகம் முழுவதும் வெளியான அனைத்து இடங்களிலும் வசூல் சாதனை படைத்து வருகிறது. தற்போது வரை 500 கோடிக்கும் மேல் வசூல் வந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் பணியாற்றிய எழுத்தாளர் ஜெயமோகன் தற்போது 2.0 மீது வந்த விமர்சனங்கள் பற்றி பதில் அளித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது..

"இது அடிப்படையில் தமிழ்ப்படம் அல்ல. இதன் வருவாயில் 20 சதம்கூட தமிழகத்தில் இல்லை. 50 சதம்கூட இந்தியாவிலிருந்து அல்ல. இது சர்வதேச ரசிகர்களுக்கான கதை. குறிப்பாகச் சொல்லப்போனால் மூன்றாமுலக நாடுகளுக்கான படம். உலகமெங்கும் பத்தாயிரத்துக்குமேற்பட்ட அரங்குகளில் வெளியாகியது. சீனாவில் வரும் மேமாதம் பத்தாயிரம் அரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ஆகவேதான் எந்திரனில் இருந்த குடும்ப அம்சங்கள், காமெடி டிராக், காதல் போன்றவை இதில் இல்லை. கதையின் உணர்ச்சிகள் நாடகத்தனம் குறைவாக அளவோடு உள்ளன. ஆரா போன்ற மதம்சாராத ஆன்மிகச் சாயல்கொண்ட கருத்துக்கள் கீழைநாட்டு ரசிகர்களுக்கு மிக உகந்தவை," என அவர்கூறியுள்ளார்.

மேலும் 2.0வில் அறிவியல் பற்றி பேசியுள்ள அவர் "சிந்திக்கும் ரோபோ என்பதே ஒரு மிகைக்கற்பனைதான். 2.0 அறிவியல்மிகைக்கற்பனை படம் (science fantasy)" என ஜெயமோகன் தெரிவித்துள்ளார்.