Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் பெரும் சாதனையை தக்க வைத்த சர்கார்! ரசிகர்கள் கொண்டாட்டம்

விஜய் நடிப்பில் கடந்த நவம்பர் 6 ல் வெளியான படம் சர்கார். முருகதாஸ் இயக்கிய இப்படம் சர்ச்சைக்கு நடுவிலும் ரூ 250 கோடிகளை தாண்டி வசூல் சாதனை படைத்து ரசிகர்களை கொண்டாடவைத்தது.

கேரளாவில் அவருக்கு ரசிகர்கள் அதிகம். சர்கார் படத்திற்கு அங்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. கேரளாவில் முதல் நாள் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷனில் சர்கார் படம் தான் ரூ 6 கோடி பெற்று முதல் இடத்தில் இருந்தது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடிப்பில் வெளியாகியுள்ள ஒடியான் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் மட்டுமே கிடைத்துள்ளது.

கேரளாவில் முதல் நாளில் திருச்சூரில் ரூ 19.39 லட்சமும், ஆலப்பே, பத்தினம்திட்டா பகுதியில் ரூ 33.32 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளதாம். சர்கார் படத்தை முந்தும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம் பின்னடைவை சந்தித்துள்ளது மலையாள சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.