Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தயாரிப்பாளர் சங்க சர்ச்சையில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு - கமல்ஹாசன் பாராட்டு

நடிகர் விஷால் தலைமையில் இயங்கிவரும் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பெரிய முறைகேடு நடந்திருப்பதாக கூறி சங்க கட்டிடத்திற்கு பூட்டு போடப்பட்டது.

நடிகர் விஷாலும் கைது செய்யப்பட்டு நேற்று மாலை ரிலீஸ் செய்யப்பட்டார். அவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் நீதிமன்றத்தில் விஷால் இது பற்றி வழக்கு பதிவு செய்தார். அதை விசாரித்த நீதிமன்றம் சங்க கட்டிடத்திற்கு சீல் வைத்தது தவறு என தீர்ப்பளித்து அதை நீக்க உத்தரவிட்டது.

அதை நடிகர் கமல் பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். "நீதிமன்றத்திற்கு மீண்டுமொருமுறை நன்றி. தோழர்.நடிகர்@VishalKOfficial அவர்களுக்கு நீதி கிடைத்ததற்காக..." என அவர் கூறியுள்ளார்.