Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஷால் கைது விவகாரத்தில் நீதிமன்றம் அடுக்கடுக்காக சரமாறி கேள்வி! ஆடிப்போன போராட்டக்காரர்கள்

தயாரிப்பாளர் சங்க விவகாரத்தில் விஷால் நேற்று காலை கைது செய்யப்பட்டு பின் 8 மணி நேரம் கழித்து விடுவிக்கப்பட்டார். தயாரிப்பாளர் சங்கத்தை பூட்டு போட்டு காவல் நிலையத்தில் சாவியை ஒப்படைத்தவர்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள் தயாரிப்பாளர் சங்க விவகாரத்தில் காவல்துறை தலையிட என்ன முகாந்திரம் உள்ளது? தேர்தெடுக்கப்பட்டவர்கள் மீது ஏதாவது அதிருப்தி இருந்தால் புகார் கொடுக்க வேண்டும். ஆனால் பூட்டு போடும் உரிமை எந்த தரப்பினருக்கும் கிடையாது?

நிர்வாகிகளை காவல்துறை எதிர்கொண்ட விதம் தவறு. சங்கத்திற்கும், உறுப்பினர்களுக்கும் காவல் துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் சீலை அகற்ற உத்தரவிட்ட உயர்நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்ததோடு மற்றொரு அலுவலகமும் நாளை திறக்கப்படும் என விஷால் கூறியுள்ளார்.