Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் சார் இதெ செஞ்சா செம கெத்து! எதுக்கு தெரியுமா? முக்கிய பிரபலம் புகழ்ச்சி

விஜய் இன்று அவரின் ரசிகர்கள் மிகவும் கொண்டாடும் காலமாகிவிட்டது. ஒரு நேரத்தில் இவரெல்லாம் ஹீரோவா என அவரை விமர்சித்தவர்கள் உண்டு. இத்தனைக்கும் அவர் அவரின் அப்பாவின் இயக்கத்தில் நடிக்கும் போதே இந்த பேச்சு வந்துவிட்டது.

தற்போது அவரின் லெவலே வேறு என்பது போல சாதனைகள் தொடர்ந்து வருகிறது. அவர் விழாவுக்கு வந்தாலே அது மிகுந்த முக்கியத்துவமானதாக தான் இருக்கும்.

அதில் குறிப்பாக அவரின் உடைகளை பற்றி வியந்து பேசுவோர் உண்டு. அவருக்கு பல படங்களில் காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றியவர் சத்யா.

அவர் அண்மையில் ஒரு இதழுக்கு பேட்டியளித்துள்ளார். இதில் விஜய் சாருக்கு எந்த உடை போட்டாலும் நன்றாகயிருக்கும். ஒரு சாதாரண பருத்தி சட்டை போட்டாக்கூட அந்த சட்டைக்கே கெத்து வந்துடும் என கூறியுள்ளார்.