Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திரைத்துறையில் இந்த வருடம் நடந்த திருமணங்கள் மற்றும் ப்ரேக் அப்- ஸ்பெஷல் 2018 ரீவேண்ட்

திரை நட்சத்திரங்கள் என்றாலே மக்களுக்கு எப்போதும் ஒரு ஜொலிப்புடனே தெரிவார்கள். அவர்கள் வாழ்க்கையில் எது நடந்தாலும் அது உடனே வெட்ட வெளிச்சமாகும்.

அந்த வகையில் இந்த வருடம் திரைத்துறையில் நடந்த திருமணங்கள் மற்றும் ப்ரேக் அப் என்னென்ன என்பதை பார்ப்போம்...

நடிகை பாவனாவிற்கு பாலியல் தொல்லை, அதை தொடர்ந்து அதில் சம்மந்தப்பட்ட திலீப் கைது என பல சர்ச்சைகள் சூழ, பாவனா கர்நாடகாவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து செட்டில் ஆனார்.

சுந்தரபாண்டியன் படத்தின் நடித்து பெயர் பெற்ற சௌந்தர், தமன்னா என்பவரை திருமணம் செய்தார், முதலில் பலரும் ஹீரோயின் தமன்னாவா என்று குழம்பியது குறிப்பிடத்தக்கது.

சிவாஜி, திருவிளையாடல் ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்து கலக்கிய ஸ்ரேயா வெளிநாட்டு இளைஞர் ஒருவரை திருமணம் செய்தார்.

நடிகர் பார்த்திபனின் மகள், அட கண்ணத்தில் முத்தமிட்டாள் படத்தில் நடித்ததே அந்த குழந்தை தான், தற்போது அவர் வளர்ந்து திருமணமே செய்துவிட்டார்.

பரியேறும் பெருமாள் புகழ் கதிர் திருமணம் நடந்தது இந்த வருடம் தான்.

இதுமட்டுமின்றி ரஜினியின் இரண்டாவது மகள் மருமகன், ஆமாங்க, விவாகரத்து ஆனதே அஸ்வின், அவர் தான் இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார்.

காமெடி நடிகர் முனிஷ்காந்த், பாடகி வைக்கம் விஜயலட்சுமி, நடிகர் ஹரிஸ் உத்தமன் ஆகியோரின் திருமணமும் நடந்தது.

இது மட்டுமின்றி இந்தியாவே எதிர்ப்பார்த்த பிரபல நடிகை ப்ரியங்கா சோப்ரா நிக்கி ஜோன்ஸையும், தீபிகா படுகோன் ரன்வீர் சிங்கை திருமணம் செய்துக்கொண்டனர்.