Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஐ ஜாலி! இனிமே டிக்கெட் விலை இவ்வளவு தான்! மாற்றப்பட்ட ரேட் லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவுக்கு உலகளவில் எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. அஜித், விஜய், ரஜினி, கமல் போன்ற டாப் ஹீரோக்களின் படங்கள் வெளிநாடுகளிலும் வெளியாகின்றன.

வார வாரம் தியேட்டர்களில் குறைந்த 2 படங்களாவது வெளியாகிவிடுகிறது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன் GST வரி கூடுதலாக விதிக்கப்பட்டது. இது பட வசூலையும், நடுத்தர மக்களையும் பாதித்தது.

இந்நிலையில் தற்போது GST வரி விதிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் புத்தாண்டு ஜனவரி 1 முதல் இந்த திட்டம் அமல் படுத்தப்படுகிறது. இதன்படி புதிய டிக்கெட் விலை பட்டியல் இங்கே..

குறைக்கப்பட்ட GST வரி விகிதம்

  • ரூ 100 க்கும் அதிகமான டிக்கெட் - 28 % GST தற்போது - 18 % GST இனி
  • ரூ 100 க்கு கீழ் டிக்கெட் - 18 % GST தற்போது - 12 % GST இனி

சிட்டி தியேட்டர்கள்

  • ரூ 150 டிக்கெட் - ரூ 135 இனி
  • ரூ 120 டிக்கெட் - ரூ 108 இனி
  • ரூ 100க்கு குறைவான டிக்கெட் - ரூ 6 குறைவு இனி

சத்யம், எஸ்கேப், பி.வி.ஆர், ஐநாக்ஸ், மால் தியேட்டர்கள்

  • ரூ 180 டிக்கெட் - ரூ 165 இனி
  • ரூ 170 டிக்கெட் - ரூ 158 இனி
  • ரூ 160 டிக்கெட் - ரூ 130 இனி
  • ரூ 150 டிக்கெட் - ரூ 120 இனி