Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் பாட்டு, பேட்ட டிரைலருக்கு நடுவே மிரட்டும் வர்மா பாடல்!

சமூகவலைதளங்களில் தற்போது பலரும் பேசிக்கொள்வது விஸ்வாசம் படத்தின் கண்ணான கண்ணே பாடலை தான். இந்த பாடலுக்கு பலரும் தங்கள் வீட்டு பெண் குழந்தைகளை வீடியோ எடுத்து பதிவிட்டனர்.

அதே வேளையில் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட படத்தின் டிரைலரை வெளியானது பற்றியும் கமெண்ட்கள் பதிவிட்டுள்ளார்கள். இதற்கிடையே நேற்று பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடிக்கும் வர்மா படத்தின் வானோடும் மண்ணோடும் பாடல் வெளியானது.

ஆரம்பத்தில் படத்தின் போஸ்டர் அர்ஜூன் ரெட்டி போல இல்லை என விமர்சனம் செய்தனர். இந்நிலையில் யூடூபில் பலரும் நாங்கள் பாடல் இப்படியிருக்கும் என எதிர்பார்க்கவில்லை, வரிகள் நன்றாக இருக்கிறது, குட்டி சியானுக்கு வாழ்த்துக்கள் என பலரும் கூறியுள்ளனர். இப்பாடலை இதுவரை 1.18 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள்.