Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பொங்கல் போட்டியில் களத்தில் இறங்கும் விஜய்! ரசிகர்கள் மாஸ் கொண்டாட்டம்

தீபாவளி ஸ்பெஷலாக முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தை வெளியிட்டார்கள். விஜய், கீர்த்தி சுரேஷ் ஜோடி நடிக்க படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது.

ரஹ்மான் இசையில் சிம்டாங்காரன், ஒரு விரல் புரட்சி என பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் படத்தை கொண்டாடினார்கள். படம் கதை, போஸ்ட்ர் என சில சர்ச்சைகளை சந்தித்தது என்பதை அனைவரும் அறிந்ததே.

தற்போது இப்படம் 50 நாட்களை கடந்துவிட்டது. இதற்காக டிசம்பர் 31 ம் தேதி சில இடங்கள் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இப்படத்தின் 75 ம் நாளை கொண்டாட ஜனவரி 15 ல் அதாவது பொங்கல் பண்டிகை அன்று மதுரை ஜெயம் தியேட்டரில் சிறப்புக்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்களாம்.