Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2018 ல் அதிகம் பிளே செய்யப்பட்ட சூப்பர் பாடல் இதுதானாம்! நோ சர்க்கார், நோ 2.0

2018 ம் ஆண்டும் நிறைவுக்கு சென்று கொண்டிருக்கிறது. சொல்லப்போனால் இன்னும் 2 நாட்கள் தான் இருக்கின்றன. சினிமாவிலும் இந்த வரும் மறக்க முடியாத சம்பவங்கள் நிகழ்ந்து போயின.

171 படங்கள் இந்த வருடம் வெளிவந்தாக சொல்லப்படுகிறது. இதில் சில படங்கள் ஃபிளாப், ஹிட் என்பதெல்லாம் ஒரு பெரும் லிஸ்ட். இது குறித்து நாம் தனியே வீடியோ செய்தும் Cineulagam Youtube தளத்தில் பதிவிட்டுள்ளோம்.

அது ஓகே. ஆனால் இந்த வருடத்தில் வந்த பாடல்கள் சில பலரை மனங்களை கொள்ளை கொண்டன. இதில் அனைத்து தமிழ் பண்பலைகளில் (FM Channels) அதிகம் ஒலிபரப்பப்பட்ட பாடல் என்றால் அது டிக் டிக் டிக் படத்தில் வந்த குரும்பா பாடல் தானாம்.

இதனை பாடலாசிரியர் மதன் கார்க்கியும் வெளியிட்டுள்ளார். சர்கார், 2.0 பாடல்கள் அதிகம் டிரெண்டிங்கில் இடம் பெற்றிருந்தாலும் டிக் டிக் டிக் அப்படியான ஒரு சிறப்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.