Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகர்கள் இருந்தும் தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் வசூல் இதுவே! சீனாவிலும் மோசமான நிலைமை

கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி கலவையான விமர்சனங்களை சந்தித்த படம் தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான். பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர்களான அமீர்கான், அமிதாப் பச்சன் ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும் நடிகை கத்ரீனா கைஃப் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். விஜய் கிருஷ்ணா இயக்கத்தில் வந்த இப்படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.

ரூ 335 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ 275 கோடிகளை மட்டுமே வசூலித்தது. இதனால் படம் நஷ்டத்தில் முடிந்தது. இந்நிலையில் ஒரு மாத காலத்திற்கு பிறகு சீனாவில் நேற்று படம் வெளியாகியுள்ளது.

இதில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் இப்படம் ரூ 10.67 கோடிகளை மட்டுமே வசூல் செய்துள்ளதாம். இதற்கு முன் வெளியான அமீர்கானின் படங்கள் டங்கல், சீக்ரட் சூப்பர் படங்களை விட தக்ஸ் படத்தின் வசூல் குறைவு தான்.