Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய படத்தின் சாதனையை முறியடித்த பேட்ட! அப்போ சர்கார் - விளக்கம் இதோ

பொங்கல் ஸ்பெஷல் ரிலீஸில் விஸ்வாசம் படத்துடன் மோதுகின்றது ரஜினி நடித்திருக்கும் பேட்ட. இதனால் ஒட்டு மொத்த திரையுலகிலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இப்படத்தின் டிரைலர் அண்மையில் வந்தது. வந்த 24 மணி நேரத்திலேயே 11 மில்லியன் பார்வைகளை கடந்தது. 5 லட்சம் லைக்குகளையும் தாண்டிவிட்டது. இதற்கு முன் ரஜினி நடித்த 2.0 படமும் இதே வருடத்தில் தான் வெளியானது. இதன் டிரைலர் ஒரு நாளில் 80 லட்சம் பார்வைகளை மட்டுமே பெற்றது.

எனவே இந்த விசயத்தில் பேட்ட படம் 2.0 படத்தை முந்திவிட்டது என சொல்லலாம். அதே வேளையில் சர்கார் படத்துடன் ஒப்பிடுகையில் பேட்ட படம் பின்னுக்கு தான் இருக்கின்றது.