Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அட்லி விஜய் படத்தில் இப்படியும் ஒரு ஸ்பெஷல் இருக்கிறதாம்! போடு செம

விஜய்யின் சர்கார் வந்து போய்விட்டது. கடந்த வருட தீபாவளி ஸ்பெஷலாக வந்த இப்படத்தை ரசிகர்கள் வெகு விமரிசையாக கொண்டாடினார்கள். அந்த வகையில் படம் ரூ 250 கோடி வசூலை அள்ளியது.

அதே வேளையில் விஜய்யின் அடுத்த படம் அட்லியுடன் தான் என்ற செய்தியும் வெளியாகிவிட்டது. படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. முதற்கட்ட வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இப்படத்தில் விஜய் கால்பந்து விளையாட்டு வீரராக நடிக்கவுள்ளார் என சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அவர் பெண்கள் அணிக்கு பயிற்சியாளராக (கோச்) இருப்பார் எனவும் அவரின் பெயர் குரு என்றும் சொல்லப்படுகிறது.

மேலும் அட்லி இப்படத்தில் 16 பெண்களை அறிமுகப்படுத்துகிறாராம். இவர்கள் விஜய்யின் அணியில் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.