Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷ் படம் பாதியில் நிற்க இது தான் காரணமா?

நடிகர் தனுஷ் நடிப்பது மட்டுமின்றி பாடுவது மற்றும் இயக்குவது என தொடர்ந்து பல துறைகளிலும் கலக்கி வருகிறார்.

அவர் இயக்குனராக அறிமுகமான முதல் படம் பவர் பாண்டி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அது மட்டுமின்றி தனுஷ் சென்ற வருடம் தன் இரண்டாவது படத்தை இயக்கவுள்ளார் என கூறப்பட்டது.

அந்த வரலாற்று படத்தில் நடிகர் நாகார்ஜூனா ஹீரோவாக நடிக்கிறார் எனவும் கூறப்பட்டது. ஆனால் ஏதோ சில பிரச்னைகளால் ஷூட்டிங் துவங்கிய சில நாட்களிலேயே படம் நின்றது.

இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தில் நடிப்பதற்காகத்தான் தனுஷ் தான் இயக்கும் படத்தை தள்ளிவைத்துள்ளார் என கோலிவுட் வட்டாரத்தில் தற்போது தகவல் பரவி வருகிறது.