நடிகர் விஜய் அடுத்து அட்லீ இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு பிறகு யார் இயக்கத்தில் நடிப்பார் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் சசிக்குமார் பாகுபலி இயக்குனர் ராஜமௌலியை நேரில் சந்தித்து பேசிய புகைப்படம் வெளியாகி வைரலானது. சசிக்குமார் அடுத்து ஒரு வரலாற்று படம் இயக்கவுள்ளதாகவும் அதற்கு ஆலோசனை பெறத்தான் ராஜமௌலியை சந்தித்தார் என்று கூறப்பட்டது.
அந்த படத்தில் நடிகர் விஜய்யை நடிக்கவைக்க சசிக்குமார் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. ஆனால் விஜய் எதோ காரணதால் அதை மறுக்க, தற்போது அந்த வாய்ப்பு நடிகர் சூர்யாவுக்கு கிடைத்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
Had a nice meeting with @ssrajamouli thank u sir pic.twitter.com/3QAM0jB9kd
— M.Sasikumar (@SasikumarDir) August 3, 2018