நடிகர் யோகி பாபு இதுநாள் வரை காமெடியனாகி மட்டுமே நடித்துவந்துள்ளார். அதற்கு ரசிகர்களும் மிக அதிரடியாக வரவேற்பையும் அவரது படங்களுக்கு கொடுத்துள்ளனர்.
தற்போது யோகி பாபு கதையின் நாயகனாக தர்மபிரபு படம் தயாராகி வருகிறது. அதில் நடிக்கும் முன்பு யோகி பாபு மற்றும் தயாரிப்பாளர் இருவரும் கும்பகோணம் அருகில் உள்ள எமதர்மராஜா கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளனர்.
மேலும் ஷூட்டிங் இடத்தில் யாருக்கும் அசைவ உணவு கிடையாது என முடிவெடுத்துள்ளனர். ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை உள்ளதால் இப்படி செய்துள்ளனர்.
படத்திற்காக எமலோகம் போன்ற செட் 2 கோடி செலவில் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.