Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் விஸ்வாசத்திற்கு பெருமை சேர்த்த தமிழக காவல் துறை! மொத்த ரசிகர்களையும் கொண்டாட வைத்த ஸ்பெஷல் இதோ

அஜித்திற்கு சினிமா நடிகர் என்பது மட்டுமில்லாமல், நல்ல மனிதர் என்ற புகழும் இருப்பது அனைவரும் அறிந்ததே. சமூகவலைதளத்தில் நேரத்தை வீணாக்காமல் பலருக்கும் பயனுள்ள வேலைகளை செய்து வருகிறார்.

அண்மையில் விஸ்வாசம் படத்தின் டிரைலர் வெளியானது. இதனை ஒட்டு மொத்த அஜித் ரசிகர்களும் கொண்டாடினார்கள். மதுரை சுற்றுவட்டார கதையை கொண்டு படம் எடுக்கப்பட்டிருப்பது உறுதியாகிவிட்டது.

அவருக்கு அரசு ஊழியர்களும் ரசிகர்களாக இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் புத்தாண்டு தினமான நேற்று மதுரை மாவட்ட காவல் மக்களுக்கு அனுப்பிய வாழ்த்து செய்தியில் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் டையலாக் போல புகைப்படத்துடன் செய்தி அனுப்பியுள்ளார்கள்.

இதனால் மதுரை மாவட்ட அஜித் ரசிகர்கள் குஷியாகிவிட்டனர்.