Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விவேகம் வில்லனின் அடுத்த அதிரடி! முக்கிய பிரபலத்தின் வாழ்க்கை வரலாறு படத்தில்

விவேகம் படத்தில் அஜித்திற்கு நண்பனாக நடித்து வில்லனாக மாறியவர் நடிகர் விவேக் ஓபராய். பாலிவுட் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவரான இவர் பல சமூக சேவைகளை செய்து வருகிறார்.

தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கிறாராம் ஓமங் குமார். இவர் மேரிகோம், சரப்ஜித் சிங் என முக்கியமானோரின் வாழ்க்கை வரலாறு படத்தை தயாரித்தவர்.

இதில் மோடி படத்தில் விவேக் ஓபராய் மோடியாக நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் போஸ்டரை வரும் 7 ம் தேதி மும்பையில் நடக்கும் நிகழ்ச்சியில் வெளியிடவுள்ளார்களாம்.