Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கனா படத்தின் லாபம் சிவகார்த்திகேயனுக்கு இல்லையாம்! யாருக்கு போய் சேருகிறது தெரியுமா

நடிகர் சிவகார்த்திகேயன் ரஜினி, கமல், அஜித், விஜய் என போட்டி நிறைந்த இந்த சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். அண்மையில் அவர் கனா படத்தின் மூலம் தயாரிப்பாளரானார். அவரின் நண்பன் அருண் ராஜா காமராஜ் இயக்கி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க சிவா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் வெற்றி விழா இன்று நடைபெற்றது. இதில் பேசிய சிவா இப்படத்தின் லாபம் என் நண்பர்களுக்கு தான். ஆனால் அதில் ஒரு பகுதியை கனாவின் கிளைமாக்ஸில் யாருடைய வலியைச் சொல்லியதோ, அவர்களுக்காக பயன்படுத்தப்படும். மேலும் நான் யாருக்கு என்ன செய்யப் போகிறேன் என்பதை சொல்லவே மாட்டேன்.

நமக்கு சோறு போம் 4, 5 விவசாயிகளின் வாழ்க்கையையாவது இந்த லாபம் மாற்றும் என உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன். இதை சொல்லக்கூடாது என நினைத்தேன். ஆனால் அது சரியாக இருக்காது என கூறியுள்ளார்.