Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேட்ட படத்திற்கு இதுவரை இல்லாத புது கொண்டாட்டம்! நிஜமாவே பேட்ட பொங்கல் தான்

ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படமும் அதிரடியாக இன்று களத்தில் இறங்கிவிட்டது. அதனால் இந்த 2019 பொங்கல் அதிரடியான பொங்கல் என்றே சொல்லலாம்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வந்த இந்த படத்திற்கு காலை முதலே நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளது. பல இடங்களிலும் கொண்டாட்டம் களை கட்டியுள்ளது.

வழக்கம் போல இருக்கும் பாலபிஷேகம், கட்டவுட் என்பதற்கு மாறாக ரசிகர்கள் இம்முறை புதுவிசயத்தை புகுத்தியுள்ளனர் என்றே சொல்லலாம்.

நாகர்கோவிலில் உள்ள தியேட்டர் ஒன்றில் ரசிகர்கள் ரஜினியின் வயதை குறிக்கும் விதமாக 69 பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடியுள்ளனர்.

சென்னையில் உடலண்ட்ஸ் தியேட்டரில் ரசிகர் ஒருவர் திருமணம் செய்துகொண்டு பேட்ட படத்தை கொண்டாடியுள்ளார்.