Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தும் சூப்பர்ஸ்டார் தான்.. முதலில் பயம் இருந்தது..! விஸ்வாசம் தயாரிப்பாளரின் பேட்டி

விஸ்வாசம் படத்தினை தற்போது ரசிகர்கள் கொண்டாடிவரும் நிலையில் தற்போது படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன் அளித்துள்ள பேட்டியில் பேட்ட படத்துடன் மோதலால் ரசிகர்கள் பிரிவார்கள் என பயந்தோம் என கூறியுள்ளார்.

"ஷூட்டிங் துவங்கியதும் தீபாவளி ரிலீஸ் என தான் அறிவித்தோம். ஆனால் ஸ்டிரைக் காரணமாக ஷூட்டிங் நின்று தீபாவளிக்கு வரமுடியாமல் போனது. பின்னர் பொங்கல் ரிலீஸ் என ஆகஸ்ட் மாதமே அறிவித்துவிட்டோம். ஆனால் அவர்கள் டிசம்பரில் வந்து பொங்கலுக்கு பேட்ட ரிலீஸ் என அறிவித்ததும் எனக்கு ஷாக் ஆனது. நாங்கள் ரஜினியை வைத்து 6 படம் தயாரித்திருக்கிறோம். அதனால் இது தர்மசங்கடம் ஆனது. அதனால் சன் பிக்சர்ஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் அவர்கள் பொங்கல் விடுமுறை என கூறி ரிலீஸ் தேதியை மாற்ற முடியாது என கூறிவிட்டனர்."

"முதலில் பெரிய பயம் இருந்தது. ஒரே நாளில் வெளியானால் ஆடியன்ஸ் பிரிவார்கள் என பயந்தேன். ஆனால் அதையெல்லாம் மீறி இப்போது படத்தின் ரிசல்ட் பார்த்து மகிழ்ச்சியாக உள்ளது, அதுவும் பெரிய சூப்பர்ஸ்டாருடன் மோதி இப்படி ஜெயித்திருப்பது மகிழ்ச்சி. அஜித்தும் சூப்பர்ஸ்டார் தான்" என தியாகராஜன் கூறியுள்ளார்.