Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் விஜய் பட பிரபலம்! யார் அவர் தெரியுமா

கமல்ஹாசன் அடுத்த படமான இந்தியன் 2 பற்றி தகவல்கள் வந்துகொண்டே தான் இருக்கின்றன. சங்கர் இயக்கும் இப்படம் ஒரு திரில்லிங் ஸ்டோரி என சொல்லலாம்.

இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக வரும் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக செட் வேலைகள் நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்பே ஆரம்பிக்க வேண்டிய ஷுட்டிங் வரும் ஜனவரி 18 ல் தான் தொடங்குகிறது.

இந்த படத்தின் சிம்பு கமல்ஹாசனுக்கு பேரனாக நடிக்கவுள்ளார் என ஏற்கனவே தகவல்கள் வந்தது. இந்நிலையில் இப்படத்தின் புரொடக்சன் டிசைன் பணிகளுக்காக முத்துராஜ் என்பவர் தற்போது இணைந்துள்ளாராம்.

இவர் விஜய்யுடன் நண்பன், புலி, தெறி, மெர்சல், அண்மையில் வந்த 2.0, சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் என பல படங்களில் பணியாற்றிவர். நண்பன், 2.0 படங்களை சங்கர் இயக்கியது குறிப்பிடத்தக்கது,