Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காலில் விழுந்த முதியவர் - அதிர்ச்சியான பேட்ட இயக்குனர்

பேட்ட படம் வெளியான அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக சென்னையில் விஸ்வாசம் படத்தை விட அதிகமாக வசூல் பெற்றுள்ளது.

இந்நிலையில் சென்னை கிரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கிற்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சென்றுள்ளார். அப்போது படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடினார்.

அப்போது அருகில் இருந்த 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் "என் தலைவனை நீ திரும்ப கொடுத்துட்டியே" என கூறி கார்த்திக் சுப்புராஜின் காலில் விழுந்துவிட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத அவர் அதிர்ச்சியடைந்து உடனே அவர் எழுப்பியுள்ளார்.