Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேட்டக்கு தியேட்டர் அதிகமாகிவிட்டதா? விஸ்வாசம் தயாரிப்பாளர் கொடுத்த பதிலடி

ஒரே நாளில் வெளியான பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களுக்கு தமிழ்நாட்டில் கிட்டத்தட்டஒரே அளவிலான தியேட்டர் எண்ணிக்கை தான் ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்பின் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பொறுத்து தியேட்டர்கள் தங்கள் காட்சிகளை மாற்றியமைத்து வருகின்றன.

இந்நிலையில் பேட்ட படத்தின் தியேட்டர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ரஜினியின் பிஆர்ஓ ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதற்கு விஸ்வாசம் படத்தை வெளியிட்ட KJR ஸ்டுடியோஸ் பதிலடி கொடுத்துள்ளது.

"உண்மை என்ன என்பது தமிழ்நாட்டு மக்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் தெரியும். நீங்கள் ஏன் தேவையில்லாமல் பிரச்னையை உண்டாக்க பார்க்கிறீர்கள்?" என கேட்டுள்ளனர்.

ரசிகர்கள் மோதல் ஒருபுறமிருக்க தற்போது இவர்களும் மோதிக்கொள்வது அனைவருக்கும் ஆச்சரியம் அளித்துள்ளது.