Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அதிக வசூலை அள்ளி கொடுக்கும் இந்த ஒரு ஹீரோவுக்காக படத்தில் இப்படியா ஒரு பிரம்மாண்ட ஏற்பாடா!

பாலிவுட் சினிமாவின் மிக முக்கிய நடிகர் சல்மான் கான். அவரின் படங்கள் என்றால் எப்போதும் வசூல் வேட்டை தான். பல கோடிகளை சம்பாதிக்கும் இவர் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலிலும் இடம் பிடித்திருக்கிறார். உலகளவில் கவனத்தை பெற்ற பிரபலங்கள் லிஸ்டிலும் இருக்கிறார்.

அவரின் நடிப்பில் வந்த பல படங்கள் 100 கோடி கிளப்பில் இருக்கின்றன. அதையும் தாண்டி வசூலை கொடுத்திருக்கிறார். இந்நிலையில் அவர் தற்போது பாரத் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு தளத்திலிருந்து சல்மான் இருக்கும் வீடு 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்றது. மும்பையில் இருந்து இங்கு தினமும் வர கடும் போக்குவரத்து நெரிசல் இருக்கின்றதாம்.

இதனால் அவருக்காகவே படப்பிடிப்பு தளத்திலேயே 10 ஆயிரம் சதுர அடியில் ஒரு ஜிம்மை தயார் செய்துகொடுத்துள்ளார்களாம். இதனால் சல்மான் வீட்டிற்கே செல்லாமல் இங்கேயே தங்கி தன்னுடைய காட்சிகளை நடித்து கொடுத்து வருகிறாராம்.