தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸில் தற்போது பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்கள் வசூல் வேட்டை நடத்தி வருகின்றன. தற்போது தமிழ்நாடு வசூலில் விஸ்வாசம் படம் தான் முன்னணியில் இருக்கிறது என கூறப்படுகிறது.
இந்நிலையில் பேட்ட படத்தினை பல முன்னணி ஏரியாகளில் விநியோகித்த ரெட் ஜியன்ட் மூவிஸ் நிறுவனத்தை சேர்ந்த செண்பகமூர்த்தி என்பவர் அளித்துள்ள பேட்டியில் பேட்ட படம் தான் இறுதியில் அதிகம் வசூலிக்கும் என கூறியுள்ளார்.
"பேட்ட மற்றும் 'விஸ்வாசம்' என இரண்டு படங்களுமே நல்ல வசூல் செய்து வருகிறது. ஒன்றுமே குறையில்லை. ஆனால், இறுதியில் ரஜினி சார் படம் தான் நிக்கும். எங்களுடைய படங்கள் வெளியீட்டு வசூலில் 'பேட்ட' தான் நம்பர் ஒன்" என அவர் கூறியுள்ளார்.