Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வேண்டுமென்றே தான் காபி அடித்தோம்! காரணம் சொல்லும் மஹத் பட இயக்குனர்

நடிகர் மஹத் தீவிர சிம்பு ரசிகராக ஒரு படத்தில் நடிக்கிறார். கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் மஹத்திற்கு ஜோடியாக ஐஸ்வர்யா தத்தா நடிக்கிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையில் சிக்கியது. காரணம் அந்த போஸ்டர் பின்னணியில் இருந்தது விஷால் படத்தின் பாடல் காட்சி. அதை கண்டுபிடித்த ரசிகர்கள் படக்குழுவை வறுத்தெடுத்துவிட்டனர்.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் பிரபு ராம் தற்போது அளித்துள்ள பேட்டியில் அந்த போஸ்டரில் வேண்டுமென்றே தான் காபி அடித்து வைத்ததாக கூறியுள்ளார். கெட்டவனு பேரெடுத்த நல்லவன்டா படத்தில் மற்ற பல படங்களில் ஸ்பூப் காட்சிகள் இருக்குமாம். அதை குறிக்கும் விதத்தில் தான் இப்படி ஒரு போஸ்டர் செய்ததாகவும், அது மக்களிடம் சென்று சேர்ந்தது மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார்.

கீழே விழுந்தாலும் மீசையில் மண்ணு ஒட்டவில்லை என்பதுபோல இந்த விளக்கம் உள்ளது என மீண்டும் பலர் விமர்சித்து வருகின்றனர்.