Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் ரைசாவின் இரட்டை அர்த்த பதிவால் ஷாக்கான ரசிகர்கள்

சமீபத்தில் தான் பிக்பாஸ் புகழ் நடிகை ரைசா ஹீரோயினாக நடிக்கும் ஆலிஸ் என்ற படத்தின் அறிவிப்பு வெளிவந்தது. யுவன் தயாரிக்கும் அந்த படத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதை உள்ளதாம்.

ரைசா சமீபத்தில் வெளியிட்டுள்ள ட்விட்டில் ஜீவி பிரகாஷுடன் படுக்கையறையில் எடுத்த ஒரு போட்டோவை போட்டு ‘Safety First' என மட்டும் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு படம் பற்றிய ட்விட் தான் என்றாலும், அதை பார்த்தவர்கள் வேறு அர்த்தத்தில் புரிந்துகொண்டு கமெண்டு செய்து வருகின்றனர்.

ஆலிஸ் மட்டுமின்றி ரைசா தற்போது மற்றொரு புதிய படத்திலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதில் அவர் ஜீ.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். கமல் பிரகாஷ் என்கிற புதுமுக இயக்குனர் இயக்குகிறார்.

இந்த படத்தின் கதை ஒரே இரவில் நடப்பது போல இருக்குமாம். பெங்களூரில் வேலை செய்யும் ஒரு இளைஞர் தன் சொந்த ஊரான குன்னுருக்கு காரில் செல்கிறார். அந்த பயணத்தில் சந்திக்கும் சம்பவங்கள் தான் முழு படமும் என இயக்குனர் தெரிவித்துள்ளார். மரகத நாணயம் படம் போல இதிலும் ஹாரர் கலந்த திரில்லர் கதை என்று கூறப்படுகிறது.