Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஷாலுக்கு வந்த நெருக்கடி! வழக்கு போட்ட தயாரிப்பாளர் - இப்படி ஒரு கண்டிசனா

அண்மையில் நடிகர் விஷால் கைது செய்யப்பட்டு பின் மாலையிலேயே விடுவிக்கப்பட்டார். தயாரிப்பாளர் சங்க விவகாரத்தில் அவருக்கு சில பிரச்சனைகள் இருந்து வருகிறது. அதில் அவரை எதிர்பவர்கள் அண்மையில் சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டு பரபரப்பை உண்டாக்கினர்.

வரவு செலவுகளை வெளியிட வேண்டும் என்றும், இளையராஜாவுக்கான கவுரவ விழாவை நடத்தக்கூடாது எனவும் கோரிக்கை வைத்தனர். ஆனால் விஷால் விழா நிச்சயம் நடக்கும் என கூறினார்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் சதீஷ் மனுதாக்கல் செய்துள்ளார்.இதனால் நீதிமன்ற இது குறித்து விளக்கம் கேட்டு சங்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் சதீஷ் கூறுகையில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்துவது தொடர்பாக சங்க உறுப்பினர்களிடம் தெரியப்படுத்தவில்லை. கணக்கு, வழக்கு காட்டாமல் இளையராஜாவுக்கு விழா நடத்தக் கூடாது.

தயாரிப்பாளர் சங்கத்தின் வைப்பு நிதி என்ன ஆனது என தெரியவில்லை. இளையராஜா நிகழ்ச்சி மூலம் ரூ 7 கோடி வருமானம் கிடைக்கும் என்கிறார்கள். அந்த தொகையை கோர்டில் டெபாசிட் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.