Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஸ்ரீ தேவியின் பங்களா ரகசியங்கள்! வீடியோவால் பெரும் சர்ச்சை - கணவர் போனி கபூர் அதிர்ச்சி

நடிகை ஸ்ரீதேவியின் கடந்த வருடம் ஃபிப்ரவரி 24 ல் காலமானார். அவரின் வாழ்க்கை வரலாற்றை ஆவண படமாக எடுக்கவுள்ளார் அவரின் கணவர் போனி கபூர்.

இந்நிலையில் இயக்குனர் பிரசாந்த் மாம்புலி என்பவர் ஸ்ரீதேவி பங்களா என்ற பெயரில் படம் எடுத்துள்ளார். இதில் பிரியா பிரகாஷ் வாரியார் நடித்துள்ளார்.

இதன் டீசர் ஹிந்தியின் அண்மையில் வெளியானது. இதில் பிரியா குளியல் அறை தொட்டியில் விழுந்து கிடப்பது போன்ற காட்சிகள் ஸ்ரீதேவியின் மரணத்தை பிரதிபலிப்பது போல இருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போனி கபூர் படத்தின் ஸ்ரீதேவியின் பெயரை பயன்படுத்த கூடாது என கூறியுள்ளதோடு வழக்கு தொடர்வேன் என வலியுறுத்தி நோட்டீஸ் விட்டிருக்கிறார்.

இதனால் இயக்குனர், படத்தின் பெயரை மாற்ற முடியாது. படத்தின் நிறைய ரகசியங்கள் இருக்கின்றன. படம் பார்த்த பிறகு மக்கள் இது ஸ்ரீதேவியின் வாழ்க்கை கதையா என முடிவெடுப்பார்கள்.

நான் ஸ்ரீதேவியின் மீது மதிப்பு கொண்டவன், தவறாக சித்தரிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.