அத்தனை சினிமா ரசிகர்களுக்கும் வந்த எதிர்பாராத அதிர்ச்சி தான் பாலா இயக்கிய வர்மா படம் வெளிவராது என்பது. தெலுங்கில் வந்த அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக்கான இப்படத்தில் விக்ரம் மகன் துருவ் நடித்திருந்தார்.
அதே வேளையில் தமிழில் அறிமுகமான பெங்காலி நடிகை மேகா சௌத்ரிக்கும் பெரும் அதிர்ச்சி தான். இந்நிலையில் கௌதம் மேனனை கொண்டு மீண்டும் இதே படத்தை எடுக்கப்போவதாக தகவல் வெளியானது.
படத்தில் ஹீரோவை தவிர மற்ற எல்லோரும் மாற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் புதியதாக எடுக்கப்போகும் படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிக்கவுள்ளதாக தகவல் சுற்றிவருகிறது. இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.