Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய நாளில் பிரபல நடிகரின் படத்துடன் மோதும் சூர்யா! சபாஷ் சரியான போட்டி

சூர்யா ரசிகர்களின் தற்போதைய பெரும் எதிர்பார்ப்பு NGK படம் தான். செல்வராகன் இயக்கத்தில் அரசியல் பேசும் இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே வேளையில் சூர்யா கே.வி.ஆனந்துடன் காப்பான் படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் போஸ்டர்கள் அண்மையில் வெளியானது. அதிலிருந்த சூர்யாவின் கெட்டப் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தான்.

மலையாள சினிமாவின் பிரபல நடிகர் மோகன் லாலும் இதில் நடித்துள்ளார். இந்நிலையில் காப்பான் படம் வரும் ஆக்ஸ்ட் 15 ல் வெளியாகவுள்ளது. அதே நாளில் தான் பாகுபலி புகழ் பிரபாஸ் நடித்துள்ள சாஹோ படமும் வெளியாகவுள்ளதாம்.

சூர்யாவுக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு உண்டு. அதே வேளையில் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான பிரபாஸின் படம் வருவதால் வசூல் எப்படியிருக்கும் என பொறுத்திருந்து பார்க்கலாம்..