Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாகுபலி புகழ் இயக்குனர் ராஜ மௌலியின் படத்தில் இணைந்த முக்கிய சினிமா நடிகர், நடிகை! பெரிய கூட்டணி

பாகுபலி படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவை உலகில் பெரும் வரலாறு படைத்தவர் இயக்குனர் ராஜமௌலி. பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் இரண்டு பாகங்களாக வெளியானது. மேலும் படம் எவ்வளவு பெரிய வசூலை அள்ளியது என்பது இன்றும் பலருக்கும் நினைவிருக்கும் தானே.

தற்போது அவர் ஜூனியர் NTR, ராம்சரணை வைத்து RRR படத்தை இயக்கவுள்ளார். அண்மையில் இப்படத்தில் தமிழ் நடிகர் சமுத்திரகனியும் நடிக்கவுள்ளார். அத்துடன் பாலிவுட் நடிகை ஆலியா பட் இணைந்ததாக தகவல் வந்தது.

இந்நிலையில் தற்போது பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் அஜய் தேவ்கண் இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.