Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நயன்தாராவிற்காக விக்னேஷ் சிவன் எடுக்கும் ரிஸ்க்

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் காதலித்து வருவது ஊரறிந்த விஷயம் தான். அவர்கள் இருவரும் ஜோடியாக வெளிநாடுகளுக்கு செல்லும் புகைப்படங்கள் அடிக்கடி வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நயன்தாரா தற்போது நடித்து வரும் தளபதி63 படத்திற்கு பிறகு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அதனை அவள் பட புகழ் இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கவுள்ளார்.

இந்த படத்தினை விக்னேஷ் சிவன் தயாரிக்கவுள்ளார் என்று தற்போது தகவல் கசிந்துள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.