Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆளப்போறான் தமிழன் சாதனை பின்னுக்கு தள்ளிய முக்கிய பாடல்! விஜய் 63 பிரபலத்தின் ரியாக்‌ஷன் இதுதான்

மெர்சல், சர்கார் தொடங்கி தற்போது விஜய் 63 படத்தில் விஜய்யுடன் அடுத்தடுத்து பயணிப்பவர் பாடலாசிரியர் விவேக். இவர் எழுதிய ஆளப்போறான் தமிழன் பாடலை மறக்க முடியாது. பாடல் பலரையும் ஈர்த்து பெரும் புரட்சியுடன் அந்நேரத்தில் பெரும் சாதனை செய்தது.

தற்போது வரை 94 மில்லியன் பார்வைகளை மட்டுமே பெற்றுள்ளது. ஆனால் இப்போது இந்த சாதனையை முந்தியுள்ளது அண்மையில் தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் வந்த மாரி 2 படத்தின் ரவுடி பேபி பாடல்.

இந்நிலையில் விவேக் தற்போது பெருமிதத்துடன் மாரி 2 படத்தின் இசையமைப்பாளர் யுவன், பாடல் பாடிய தனுஷ், தி, சாய் பல்லவி என பலரையும் வாழ்த்தியுள்ளார்.