Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சீன் காட்டும் சின்னத்தம்பி யானை விசயத்தில் அதிரடி கொடுத்த பிரபல நடிகர்கள் - சீரியஸான மக்கள்

அப்போது சின்னத்தம்பி படம் ஞாபகம் இருக்கிறதோ இல்லையோ இப்போது வந்துள்ள சின்னத்தம்பி யானை காட்டும் படத்தை யாரும் மறக்க மாட்டார்கள். கடந்த மாதம் கோவையிலிருந்து டாப்சிலிப் வரகளியாறு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.சில நாட்களிலேயே தனது வாழ்விடத்தைத் தேடி வெளியில் வந்துவிட்டது. ஆனால் யாரையும் அது எந்த தொந்தரவு செய்யாமல் இருப்பது தான் ஆச்சர்யம்.

இந்நிலையில் யானையை காட்டுக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனாலும் முடிந்த பாடில்லை. இந்நிலையில் யானையை முகாமுக்கு அனுப்ப வேண்டும் என வனத்துறை நீதிமன்றத்தில் கூற அதற்கு அவர்கள் எதற்காக சின்னத்தம்பியை முகாமுக்கு அழைத்துச் செல்லவேண்டும்? அதற்கு மீண்டும் இயற்கை உணவுகளைக் கொடுத்து ஏன் காட்டுக்குள் விடக்கூடாது? சின்னத்தம்பியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் கேள்வி கேட்டனர்.

இந்நிலையில் அந்த யானையை கும்கி யானையாக மாற்றும் முடிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் அருண் பிரசன்னா, மதுக்கரை மகராஜா யானை கூண்டில் உயிரிழந்த படத்துடன் பதிவிட்டுள்ளார் இதை ஆர்யா, சிபிராஜ், ஜி.வி.பிரகாஷ், விஜய்சேதுபதி போன்ற நடிகர்கள் மீண்டும் பகிர்ந்து தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.