Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் சங்கம் கட்டடம் கட்ட இத்தனை கோடி செலவாகியுள்ளதா?

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஒரு பெரிய பரபரப்புடன் நடந்தது. அதில் வெற்றிபெற்ற விஷால் அணி குழவினர் ஒரு பெரிய கட்டடம் கட்டப்படும் என்று தான் முதல் வாக்கு கொடுத்தார்கள்.

அதன்படி சென்னையில் நடிகர் சங்க கட்டட வேலைகள் படு வேகமாக நடந்து வருகிறது. அண்மையில் தன்னுடைய தேவ் பட புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கார்த்தியிடம் நடிகர் சங்க கட்டடம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

உடனே அதற்கு அவர் கட்டடம் கட்ட இதுவரை ரூ. 30 கோடியை தாண்டியுள்ளது, இன்னும் பணம் தேவை, அதற்காக கலை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.