Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எதிர்பாராத பெரும் நஷ்டமடைந்த பிரபல நடிகரின் படம்! பொங்கலுக்கு வந்த போட்டியில் நஷ்டம் இத்தனை கோடிகளாம்

பொங்கல் ஸ்பெஷலாக நம் தமிழ் சினிமாவில் பேட்ட, விஸ்வாசம் படங்கள் வெளியாகின. அதே வேளையில் தெலுங்கில் மறைந்த பிரபல நடிகர் என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறு படம் வெளியானது. இதில் அவரின் மகன் பாலகிருஷ்ணா, வித்யா பாலம், ராணா, ரகுல் பிரீத் என பலர் நடித்திருந்தனர்.

ஏற்கனவே நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படம் வெற்றி பெற்று வசூலை அள்ளியதால் இப்படத்தின் மீதும் பெரும் எதிர்பார்த்து சூழ்ந்தது. ஆனால் படம் வெளியாகி நிலைமை தலைகீழா மாறிப்போனது.

ஆம் இப்படத்துடன் ராம் சரணின், வினய விதயே ராமா, வெங்கடேஷ் நடிப்பில் F2, பேட்ட என படங்கள் வெளியாகின. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாகம் ரூ 70 கோடி செலவில் எடுக்கப்பட்டது. ஆனால் படம் உலகம் முழுக்க ரூ 45 கோடி மட்டும் வசூலித்திருக்கிறது.

இதனால் விநியோகஸ்தர்களுக்கு ரூ 25 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. மீதி ரூ 45 கோடி நஷ்டமாம். இதனால் இரண்டாம் பாகத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. இதனால் நஷ்டமடைந்த வினியோகஸ்தர்களுக்கு பாலகிருஷ்ணா பணத்தை திருப்பி கொடுத்து வருகிறாராம்.