Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இராணுவ வீரர்கள் கொடூர தாக்குதால் சினிமா கலைஞர்கள் சங்கம் எடுத்த அதிரடி முடிவு! சரியான பதிலடி

அண்மையில் நாடு முழுக்க பெரும் சோகத்தை உண்டாக்கிய சம்பவம் ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதல். இதில் இந்திய ராணுவ வீரர்கள் 40 க்கும் அதிகமானோர் பலியாகினர்.

இதனால் தற்போது பாலிவுட் சினிமா ஊழியர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் அதிரடி முடிவை வெளியிட்டுள்ளது. இதில் புல்வாமாவில் நடைபெற்ற கொடூர தீவிரவாத தாக்குதலை அனைத்து இந்திய சினி ஊழியர்கள் சங்கம் மிகக் கடுமையாகக் கண்டிக்கிறது.

தாக்குதலில் பதிப்படைந்தவர்களின் குடும்பங்களுக்கு தங்களது ஆழந்த இறங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். தீவிரவாதம் மற்றும் மனிதாபிமானமற்ற செயல்களுக்கு எதிராக அனைத்து இந்திய சினி ஊழியர்கள் சங்கம் தேசத்துடன் கைகோர்த்துச் செயல்படும்.

இதில் பாகிஸ்தான் நடிகர்கள் மற்றும் கலைஞர்களைத் திரைப்படத்துறை முழுமையாகத் தடை செய்கிறது. இதன் பின்பும் பாகிஸ்தான் கலைஞர்களை ஏதாவது ஒரு நிறுவனம் பயன்படுத்துகிறது என்றால் அந்த நிறுவனத்தின் மீது தடை விதிப்பது மட்டும் இல்லாமல் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கை வெளியிட்டுள்ளனர்.