Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியான அதிர்ச்சி பின்னணி - சினிமாவில் இப்படியும் நடந்திருக்கிறதா

சினிமாவில் படம் எடுத்து முடித்து அதை வெளியிட்டு போட்ட பணத்தை எடுக்கும் வரை படக்குழுவுக்கு தூக்கம் என்பதே இருக்காது. ஆனால் இதெல்லாம் விட முக்கியமானது என்றால் தணிக்கை குழுவின் அனுமதி தான்.

படத்திற்கு என்ன மாதிரியான சான்றிதழ் கிடைத்தாலும் படத்தில் எதையும் நீக்க சொல்லாமல் இருந்தாலே அது படக்குழுவுக்கு கிடைக்கும் வரப்பிரசாதம் போல. இப்போது டீசர், டிரைலருக்கு கூட அனுமதி பெற வேண்டிய காலமாகிவிட்டது.

இந்நிலையில் லக்னோவை சேர்ந்த நுதன் தாக்குர் என்பவரால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சென்சார் போர்டு குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதில் கடந்த ஜனவரி 1 முதல் மார்ச் 31, 2016 வரையிலான 16 வருடங்களில் 793 படங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாம். இதில் இந்தியப்படங்கள் 586, வெளிநாட்டு படங்கள் 207. இதில் தமிழ் படங்களின் எண்ணிக்கை 96, ஹிந்தி படங்களின் எண்ணிக்கை 231.

இனி எந்தெந்த வருடங்களில் எத்தனை படங்கள் என பார்க்கலாம்.

2007 ல் - 11 படங்கள்.

2008 ல் - 10 படங்கள்.

2010 ல் - 9 படங்கள்.

2012 முதல் 2013 வரை - 82 படங்கள்.

2013 முதல் 2014 வரை - 119 படங்கள்.

2014 முதல் 2015 வரை - 152 படங்கள்.

2015 முதல் 2016 வரை - 153 படங்களுக்கு தடை.

loading...