Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியன் 2 படத்தில் மெர்சல் காம்பினேஷன்! பிரம்மாண்ட பிளான் இதோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படத்தை அடுத்து இயக்குனர் சங்கர் இந்தியன் 2 படத்தில் இணைந்துவிட்டார். கமல்ஹாசனின் மிரட்டும் இந்தியன் தாத்தா பலரையும் ஈர்த்தது. அதே வேளையில் முந்த பாகம் போல இல்லை என்ற விமர்சனமும் எழுந்தது.

அண்மையில் இப்படத்தின் ஷூட்டிங் விக்டோரியா நினைவு அரங்கு, EVP ஃபிலிம் சிட்டியில் தொடங்கியது. இந்நிலையில் இப்படத்தின் ஆர்ட் இயக்குனர் முத்துராஜ் இணைந்துள்ளாராம். இவர் தெறி, மெர்சல், 2.0 என பல முக்கிய படங்களில் பணியாற்றியவர்.

சென்னை வெளிவட்டார பகுதியில் இந்தியன் 2 படத்திற்காக செட் அமைக்கிறார்களாம். மேலும் முன்பே திட்டமிட்ட படி ராஜமுந்திரி, தாய்லாந்து பகுதிகளில் ஷூட்டிங் வரும் ஏப்ரல், மே மாதங்களில் எடுக்கப்படவுள்ளதாம்.

இப்படத்தில் டெல்லி கணேஷ், நெடுமுடி வேணு, அனிருத் என பலர் இணைந்துள்ளனர்.

loading...