Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விலகிய வினோத்? தல60 இயக்குனர் அப்போ இவர்தானா..

தல அஜித் ஹிந்தியில் ஹிட் ஆன பிங்க் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். அதை தீரன் புகழ் வினோத் இயக்கி வருகிறார். அதை தொடர்ந்து அதே இயக்குனருடன் அஜித் தன் 60வது படத்தில் நடிக்கவுள்ளார் என முன்பு கூறப்பட்டது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் மங்காத்தா 2 படத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் மற்றொருபுறம் பரபரப்பாக பேசப்பட்டது.

இதெல்லாம் ஒரு புறம் இருக்க தற்போது ஒரு புதிய தகவல் பரவி வருகிறது. தல60ல் சிறுத்தை சிவாவுடன் அஜித் மீண்டும் கூட்டணி சேர்கிறார் என கூறப்படுகிறது. பிங்க் படத்திற்கு பிறகு சிறிய இடைவெளி எடுக்க வினோத் விரும்புவதால் தான் இந்த திடீர் முடிவு என்றும் கூறப்படுகிறது.

அஜித்-சிவா கூட்டணி 5வது முறையாக இணைந்தால் டைட்டில் என்னவாக இருக்கும் என இப்போதே பலரும் யோசிக்க துவங்கிவிட்டனர். வி'யில் துவங்கி ம் என்ற எழுத்தில் முடியும் வார்த்தையாக தான் இருக்கும்.