Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி63 பர்ஸ்ட் லுக் வரும் முன்பே விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்

அட்லீ இயக்கும் தளபதி63 படம் தீபாவளிக்கு வெளிவரும் என அறிவிக்கப்பட்டு ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய் விளையாட்டு பயிற்சியாளராக நடித்துவரும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார்.

படத்தில் விஜய்யின் பெயர் மைக்கேல் என கூறி ஒரு தகவல் உலா வரும் நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளிவரும் என்று தான் ரசிகர்கள் அனைவரும் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் மதுரையில் உள்ள ரசிகர்கள் சிலர் தளபதி63 பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு காத்திருப்பதை போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். அதில் "தென்மாநிலத்தை அரட்ட வரோம், தென்மாவட்டத்தை மிரட்ட வரோம்- விரைவில் தளபதி63 முதல் பார்வை" என குறிப்பிட்டுள்ளனர்.