Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எல்கேஜி இயக்குனருக்கு தயாரிப்பாளர் கொடுத்துள்ள விலையுயர்ந்த கிப்ட்

நடிகர் RJ பாலாஜி மற்றும் பிரியா ஆனந்த் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த எல்கேஜி படம் பாக்ஸ்ஆபிஸில் நல்ல வசூல் அள்ளியது. இந்த அரசியல் நையாண்டி படத்தில் தமிழக அரசியல், தேசிய அரசியல் உட்பட பல விஷயங்களை கலாய்த்திருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

மொத்த வசூல் 15 கோடியை தாண்டிவிட்டது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் எல்கேஜி பட இயக்குனர் பிரபுவுக்கு தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

சமீப காலமாக படம் ஹிட் ஆனால் கார் பரிசளிக்கும் முறை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. தானா சேர்ந்த கூட்டம் விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கார் பரிசளித்தது விமர்சனத்திற்கு உள்ளானது. அதன் பின் பியார் பிரேமா காதல் பட இயக்குனருக்கு இசையமைப்பாளர் யுவன் கார் பரிசளித்தது குறிப்பிடத்தக்கது.

loading...