Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மங்காத்தா ரீரிலீஸில் உள்ள சிக்கல்! பிரபல தியேட்டர் உரிமையாளர் கூறிய தகவல்

வெங்கட் பிரபு இயக்கத்தில் தல அஜித் நெகடிவ் வேடத்தில் நடித்திருந்த மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வரும் என்கிற பேச்சு கடந்த சில வாரங்களாக அதிகம் உள்ளது. மேலும் அஜித்தை நேரில் சந்தித்த வெங்கட் பிரபு அப்போது எடுத்த புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டார். அதனால மங்காத்தா 2 நிச்சயம் வரும் என்கிற முனைப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் மங்காத்தா படத்தினை ரீரிலீஸ் செய்யவேண்டும் என அஜித் ரசிகர்கள் பலர் சென்னை வெற்றி தியேட்டரின் உரிமையாளரை கேட்டு வந்த நிலையில், அவர் அது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மங்காத்தா திரையிட அனுமதி கிடைக்கவில்லை என அவர் கூறியுள்ளார். அதனால் நீங்கள் தயாரிப்பாளரிடம் கேளுங்கள் என கூறியுள்ளார்.