Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அது மட்டும் நடந்தால் எல்லா ஸ்கிரீனிலும் கில்லி தான்.. அறிவித்த திரையரங்கம்

தற்போது தமிழ் சினிமாவில் ஹிட் ஆன பழைய படங்ளை எடுத்து ரீரிலீஸ் செய்யும் பழக்கம் அதிகரித்து வருகிறது. சென்னையில் உள்ள வெற்றி, ஜிகே சினிமாஸ் உள்ளிட்ட சில தியேட்டர்களில் அவை திரையிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் சிலர் கில்லி படத்தை திரும்பவும் திரையிட வேண்டும் என கேட்டு வந்தனர். ஆனால் அது டிஜிட்டலில் மாற்றப்படவில்லை, அதனால் போட முடியாது என வெற்றி தியேட்டர் உரிமையாளர் கூறியிருந்தார்.

ஆனால் விரைவில் அது டிஜிட்டலில் மாற்றப்பட்டு அமேசான் பிரைமில் வெளியிடப்படவுள்ளது என கூறப்படுகிறது.

அது மட்டும் நடந்தால் ரோகினி தியேட்டரின் 6 ஸ்கிரீனிலும் கில்லி படம் தான் திரையிடப்படும் என ரோகினி தியேட்டர் உரிமையாளர் ட்விட்டரில் பேசியுள்ளார்.