Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அதிக தொகைக்கு விலை போன காஞ்சனா 3! இந்த இடத்தில் இப்படி வரவேற்பா

ராகவா லாரன்ஸ் தனக்கென ஒரு ஸ்டைலை கடைபிடிப்பவர். ஆன்மீகம், ஆதரவற்றோர் இல்லம், சமூக சேவை என இருக்கும் அவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவுள்ள படம் காஞ்சனா 3.

அவரே இயக்கி நடித்துள்ள இப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். ஹாரர் காமெடி கலந்த படமாக உருவாக இருக்கும் இப்படத்தில் பிக்பாஸ் ஓவியா, வேதிகா, நிகிதா என பலர் நடித்திருக்கிறார்கள்.

தெலுங்கிலும் வெளியாகும் இப்படத்தை தாகூர் மது என்பவர் ரூ 11 கோடி கொடுத்து உரிமையை வாங்கியுள்ளாராம். முந்தய படங்கள் போல இதுவும் பிளாக்பஸ்டர் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.